டெவோன் நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற யுவதி மாயம்!

Date:

பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற யுவதி ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

லிந்துலை, லென்ந்தோமஸ் தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய மணி பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீரில் அடித்து சென்றுள்ளார்.

 

3 நண்பிகளுடன் இன்று (18) மதியம் 01 மணியளவில் டெவோன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற குறித்த யுவதி டெவன் ஆற்றில் இறங்கி கால்களை கழுவ முற்பட்ட போதே நீரில் அடித்துச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

 

டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் கற்பாறை பகுதியில் வழுக்கல் நிலை காணப்படுவதனால் அப்பகுதியில் நுழைய வேண்டாம் என தடை கம்பி வேலி அடிக்கப்பட்டுள்ள போதிலும் அதை தாண்டியே யுவதிகள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

297 அடி உயரமுள்ள டெவன் நீர் வீழ்ச்சியில் இருந்து கீழே வீழ்ந்திருக்காலம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் காணாமல் போன யுவதியை மீட்கும் பணியில் இராணுவத்தினரும், திம்புள்ள பத்தனை பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...