திருகோணமலை நீதிமன்ற நீதிபதிகள்,சட்டத்தரணிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கவும் -இம்ரான் எம்.பி வேண்டுகோள்!

Date:

திருகோணமலை நீதிமன்ற நீதிபதிகள்,சட்டத்தரணிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாரு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பாக அவர் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கையை ம்முன்வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

தற்பொழுது நாடுமுழுக்க வேகமாக பரவிவரும் கொவிட் – 19 ஆனது எமது திருகோணமலை மாவட்டத்திலும் வேகமாக பரவி வருவதனை அறிவீர்கள். அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது, அதில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவது மிகமுக்கியமாதொன்றாக காணப்படுகின்றது. இத்தடுப்பூசியானது தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமையடிப்படையில் ஏற்றப்படுகின்றது அதில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட திணைக்கள ஊழியர்கள், பொதுமக்களுடன் நெருக்கமாக உறவை பேணும் அலுவலகங்கள் என்பனவும் உள்ளடங்கும். நீதிமன்றங்களும் அவ்வாறான பொதுமக்களுடன் நெருக்கமான உறவை பேணும் பிரிவு என்பதனை நாம் அறிவோம்,

 

இக்கொரோனா நெருக்கடியான காலப்பகுதியிலும் திருகோணமலை நீதிமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள நீதிமன்றங்கள் இயங்குவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. நீதிமன்றங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்றுவருகின்றனர் அதில் பல்வேறு வகையான நபர்கள் உள்ளடங்குகின்றனர் முக்கியமாக போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள். இவ்வாறானவர்களுடன் தொடர்புபடுவதினால் அங்கு கடமையாற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் உள்ளடங்கிய சுமார் 150 பேர் கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் அதனால் தமக்கும் கொரோனா தடுப்பூசியினை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இவ்வாறான இக்கட்டான நிலையில் நீதிமன்றங்களில் கடமையாற்றுபவர்களின் பாதுகாப்பு கருத்திற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் அவர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று அங்கு கடமையாற்றும் 150 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியினை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...