ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரை அடங்கிய ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக தமது பதவி விலகல் கடிதத்தை ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.