நாளை (14) முதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவை

Date:

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (14) முதல் பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கு COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில், அரச மற்றும் தனியார் பிரிவுகளில் அத்தியாவசிய சேவை நிமித்தம் செல்பவர்கள் மாத்திரமே இவற்றில் பயணிக்க முடியும் என கூறினார்.

அதேநேரம் பயணிகள், அரச அல்லது தனியார் நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது தாம் செல்லும் பணி தொடர்பிலான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...