வெளிநாட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்த அரசு கவனம்!

Date:

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.அவ்வாறான வெளிநாட்டுப் பயணிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிடின் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

 

இந்த திட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதியின் பின்னர் செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.ஏனைய வெளிநாட்டவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள், Bio-bubble பாதுகாப்பு முறைமையின் கீழ் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு உள்ளீர்ப்பதற்கு விமான நிறுவனங்கள் மூலம் நிவாரணத் திட்டங்களை வழங்குவது தொடர்பிலும் சுற்றுலாத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...