இலங்கை பயணிகள் தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு!

Date:

இலங்கையில் தடுப்பூசி டோஸ்கள் இரண்டையும் செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 

6 நாடுகளை சேர்ந்த பயணிகள் நுழைவு இடைநிறுத்தப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு இராச்சிய வதிவிட அனுமதி வைத்திருக்கும் பயணிகள் ஆகஸ்ட் 5ம் திகதி முதல் முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும். இதற்காக அவர்கள் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த விலக்குகள் பொருந்தும்.

 

தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்த விலக்குகளின் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...