யாழ் ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் நேற்று ( 22 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் காலமானார் . இவர் நீண்ட காலம் தினபதி சிந்தாமணி காலத்தில் இருந்தே ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் நவமணி பத்திரிகையின் யாழ் செய்தியாளராகவும் இருந்துள்ளார் .
ஊடகவியலாளர் மட்டுமல்லாது சமூக சேவகராகவும் இருந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒருவராகும். அவரது பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொண்டு அவருக்கு ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற உயர்வான சுவனத்தை கொடுப்பானாக .