ஆசிரியர் அதிபர் போராட்டத்திற்கு அரசாங்கத்தின் தீர்வுகள் எங்கே? | எதிர்க்கட்சி தலைவர்

Date:

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு அரசாங்கத்திற்கு தீர்வு இல்லை என்றும் அதற்கு பதிலாக போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதாகவும் கூறினார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் கட்டளை நிலையியல் சட்டம் 27/2 கீழ் ஒரு கேள்வியை எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

தற்போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, ஆனால் அரசாங்கம் பிரச்சினையை தீர்க்க தவறிவிட்டது.

இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பதால், பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து திட்டவட்டமான பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

1) தற்போது ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு காரணமாக நாடாளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்கிறதா? இந்த பிரச்சனைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் வழங்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

2) கடந்த பட்ஜெட் விவாதத்தில், ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை அகற்ற குறிப்பிட்ட நடவடிக்கைகள் பற்றி நாங்கள் வினவிய போது, ​​திறைசேரி அதை அங்கீகரித்ததாக அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும், தற்போதைய பிரச்சனை என்னவென்றால், ஏலவே கூறிய இதுபோன்ற நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த நீண்டகால ஊதிய ஏற்றத்தாழ்வை அகற்ற அரசாங்கம்
செயல்படுகிறதா? அப்படியானால், எப்போது? இல்லையென்றால், அரசாங்கத்தால் மேற்கொள்ள எதிர்பார்க்கும் குறிப்பிட்ட தீர்வுகள் / பரிந்துரைகள் என்ன?

3) ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடுகளை அகற்ற எவ்வளவு செலவாகும்? அதற்கான நிதியை ஒதுக்கும் வழிமுறை எப்படி?

4) ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க தயாரான சுபோதனி குழுவின் அறிக்கையை அரசு ஏற்குமா? இல்லையென்றால், காரணங்கள் என்ன? அப்படியானால், மாற்று திட்டம் என்ன?

5) ஆசிரியர்-அதிபர் சேவையை ஒருங்கிணைந்த சேவையாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையென்றால், ஏன் இல்லை?

6) போதிய சுகாதார வசதிகளை வழங்காமல், தடுப்பூசியை முடிக்காமல் கடமைக்கு சமூகமளிக்குமாறு மக்களை அழுத்தம் கொடுப்பது எந்த அளவுக்கு நியாயமானது? ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல் தொடர்பு உபகரணங்கள், டேட்டா மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட வசதிகள் மூலம் இணைய வழிக் கல்வியை தற்காலிகமாக வழங்கி வந்தனர். இதையெல்லாம் நிறுத்திவிட்டு திடீரென பாடசாலைகளுக்கு வந்து கல்வி வழங்க இந்த வசதிகள் அனைத்தும் போடப்பட்டுள்ளதா? இந்த விடயத்தில் அரசாங்கம் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி கல்வியை வழங்க வேண்டுமா? அல்லது ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகளை வரங்குவதா ?

7) தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் கல்வி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளான நேரத்தில் ஆசிரியர்களின் பிரச்சனைக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கக்கூடாது? இதன் விளைவாக, குழந்தைகளின் கல்வி கடுமையான நெருக்கடியில் இருக்கும் மற்றும் அவர்களின் மன நிலை பாதிக்கப்பட்டு, நாட்டின் எதிர்கால மனித வளங்கள் சமநிலையற்றதாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அரசாங்கம் இதில் கவனம் செலுத்துகிறதா?

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...