சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரிக்கா!

Date:

தனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். தனது முகப்புத்தக பக்கத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

“விமுக்தி குமாரதுங்க அரசியலில் பிரவேசிக்கின்றார் என்ற தவறான பிரசாரம் இந்த நாட்களில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான அறிக்கை. நான் அதனை முழுமையாக நிராகரிக்கிறேன்.

 

அரசியலில் பிரவேசிக்கும் ஆர்வமோ விருப்பமோ அவருக்கு இல்லை, விமுக்தி குமாரதுங்க நம் நாட்டை மிகவும் நேசித்தாலும், நாட்டுக்கு சேவை செய்வதற்கான ஒரே வழி அரசியல் அல்ல என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

 

எனவே, இதுபோன்ற பொய்யான பிரசாரங்களால் மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...