நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Date:

தேவைப்பட்டால் மாத்திரமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

“நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு முடிவும் எட்டப்படும்” என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.

 

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவிவரும் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

வைரஸ் தொற்றுவதில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்க விரும்பும் நடவடிக்கைகள் என்னவென, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜயரத்ன, கேள்வி எழுப்பினார்.

 

இரத்தோட்டையில் வைரஸ் வியாபித்துள்ளது. அங்கு பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

ஆகையால், இரத்தோட்டையை முடக்குவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்றும்​ ரோஹினி விஜயரத்ன கேள்வியெழுப்பினர்.

 

இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...