வாகன இறக்குமதிக்கான தடை நீடிப்பு!

Date:

வாகன இறக்குமதி தடையை அடுத்த வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த வருடம் மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த வாகன இறக்குமதி தடை உள்ளிட்ட அரச செலவீனங்களுக்கான தடைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் தீர்மானங்களை மேற்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தேவையான ஆலோசனைகளை பெற்றுத் தந்திருப்பதாகவும் குறித்த தகவல் ஊடாக அறியக் கிடைத்துள்ளது.

 

மேலும் அரச திணைக்களங்களுக்கான வாகன இறக்குமதிக்காக எந்த விதத்திலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்காமல் இருப்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களங்களில் உள்ள பழைய வாகனங்களை புதுப்பித்து மீண்டும் பாவிப்பதற்கு மற்றும் தற்போது பல்வேறு காரணங்களுக்காக சுங்கத்திணைக்களத்தினால் விடுவிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை அரசுடைமையாக்கி திணைக்களங்களுக்கு வழங்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இலங்கையில் வாகன இறக்குமதிக்காக 2400 கோடி ரூபா வரையில் செலவிடப்படும் அதேவேளை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1.2 ட்ரில்லியன் வரை செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இலங்கைக்கு 5 – 6 இலட்ச வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அதேவேளை 2015 ஆம். ஆண்டு இலங்கைக்கு அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆண்டாகும். அந்த ஆண்டில் மாத்திரம் 647000 இலட்ச வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...