ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 ஆசிரியர்கள் அதிரடியாக கைது

Date:

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த 42 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு மற்றும் மேலும் சில விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகம்  தெரிவித்துள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று கொழும்பிற்குள் பிரவேசித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இவர்கள் காலி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் கைது சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பில் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...