கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதன் ஊடாக மற்றுமொரு தகவல் தெரியவந்துள்ளதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் தெரிவித்துள்ளார்.
கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரல்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் முதற்தடவையாக இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில், கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் கொவிட் நியுமோனியா நிலமையினாலேயே உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நியூமோனியா நோய் நிலைமைக்கு முன்னதாக ஏற்படும் நுரையீரல் சிக்கலானது எக்கியூட் லிம்போஸிட்டிக் இன்ரஸ்ட்ரீஸல் நிவ்மோ நைன்டீஸ் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சடலங்களை பரிசோதனை செய்ததன் மூலமே இவ்விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 100 இற்கு அதிகமான சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.