தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு ஆணைக்குழு மற்றும் எப்ரியல் இளையோர் வலையமைப்பு இணைந்து நடாத்திய நிகழ்நிலை (ZOOM) கருத்தரங்கு!

Date:

ஊடக வெளியீடு
இலங்கையில் முதலாவது தகவல் அறியும் ஆணைக்குழுவின் 05 வருட காலம் நிறைவு பெறல் மற்றும் சர்வதேச தகவல் தினம் ஆகியவற்றிற்கு இணைவாக தகவல் சட்டம் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள இளைஞர் யுவதிகளை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி திட்டம் இன்று (27) மத்திய மாகாணத்தை மையமாக கொண்டு நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு மற்றும் எப்ரியல் இளையோர் வலையமைப்புடன் இணைந்து நிகழ்நிலை (ZOOM) ஊடாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர் யுவதிகள் 200 பேர் இணைந்து கொண்டனர்.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் ஆணையாளர்களான சிரேஸ்ட்ட சட்டத்தரணி கிரிசாலி பிண்டோ – ஜயவர்தனவும் மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் ரோஹினி வல்கம மற்றும் ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி வழிநடாத்தினார்.

நீதி மற்றும் நியாயத்துவத்திற்காக தகவல் சட்டத்தை பயன்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இத் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சியில் தகவல் சட்டம் குறித்து எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
தகவல் சட்டம் மேலும் பலப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அதன் பகிரங்க அதிகாரசபைகள் என்ற வரைவிலணக்கத்திற்கு அரசியல் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் தகவல் சட்டம் பலப்படுத்தல் மற்றும் மேன்முறையீட்டு விசாரணையை வினைத்திறனாக்க பிரதேச மட்டத்திலான அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி கிரிசாலி பிண்டோ – ஜயவர்தன கருத்து தெரிவித்தார்.

தகவல் சட்டத்தை பிரயோகிக்கும்போது எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்து கொண்ட பலர் கருத்துக்களை தெரிவித்ததுடன் தகவல் பெற்றுக்கொள்ள முனையும்போது அதற்குறிய காரணங்கள் குறித்து கேட்கப்பட்ட சில சந்தர்ப்பங்களை சிலர் தெரிவித்தனர். அதற்கு ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தகவல் கோரும் போது அதற்குறிய காரணங்களை எந்த அடிப்படையிலும் கேட்க முடியாது என்று பதில் வழங்கினர். அதற்குறிய ஆணைக்குழுவின் கட்டளைகளையும் இதன்போது ஆணையாளர்கள் தெளிவுபடுத்தினர்.

வடக்கு மக்கள் தகவல் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் குறித்து எப்ரியல் இளையோர் வலையமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா தெளிவுபடுத்தியதுடன் இன மத வேறுபாடின்றி தகவல் சட்டத்தின்படி தகவல் பெற முடியும் என உதாரணங்களுடன் தெளிவுபடுத்தினார்.
கடந்த 05 வருட காலப்பகுதியினுள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு வழங்கிய கட்டளைகளில் 100 க்கு 85 வீதமானவை முழுமையாகவோ அரைவாசியாகவோ தகவல்களை வெளியிடல் என்றடிப்படையில் அமைந்ததாக ஆணைக்குழு தெரிவித்தது.
அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு தகவல் கோரிக்கை அனுப்பப்பட்ட பின்னர் அவர்கள் தகவல் சட்டத்திற்கு உள்ளடங்கவில்லை என்று குறிப்பிட்டு அவை மறுதலிக்கப்பட்டமை குறித்து கேள்வியொன்று வினவப்பட்டதுடன் அதற்கு ஆணைக்குழு அரசசார்பற்ற நிறுவனங்களும் தகவல் சட்டத்தின் பகிரங்க அதிகாரசபை என்பதனுள் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டது. பொது சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தகவல் பெற்றுக்கொள்ள இயலுமை காணப்படுகின்றதா என்ற கேள்விக்கு தகவல் சட்டத்தின் 43(உ) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவைகளுக்கு தகவல் பெற்றுக்கொள்ளும் இயலுமை உள்ளதாக குறிப்பிட்டது.

தகவல் சட்டத்தின் படி தகவல் கோரும் போது குறித்த தகவல் கோரல் எழுத்து மூலம் வழங்கப்படாது வாய்மொழி மூலம் உத்தியோகபற்றற்றமுறையில் தெரியப்படுத்தப்படுத்தும் சந்தர்ப்பம் உள்ளதா என வினவப்பட்டதற்கு சட்டத்தின்படி அவ்வாறு மேற்கொள்ள முடியாது என ஆணைக்குழு அதற்கு பதில் வழங்கியது. தகவல் கோரிக்கைக்கு எழுத்து மூலம் பதில் வழங்க வேண்டும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...