தென்னாபிரிக்கா அணிக்கு இலகு வெற்றி இலக்கு!

Date:

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடை​யிலான இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் டப்ரய்ஸ் சம்ஸி (Tabraiz Shamsi ) மற்றும் அய்டன் மர்க்ரம் (Aiden Markram) ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.போர்டியுன்(Bjorn Fortuin )இரண்டு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.இதற்கமைய, தென்னாபிரிக்கா அணிக்கு 104 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...