ஆப்கானிஸ்தானில் முல்லா முகம்மது ஹசன் அகுந்த் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை தலிபான் அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் புதிய அரசின் நிர்வாகிகள் இன்று (07) அறிவிக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி வழங்கியுள்ளனர்.இதையடுத்து புதிய அரசின் நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று தலிபான் அரசின் தலைவராக முல்லா முகம்மது ஹசன் அகுந்த், துணை தலைவராக அப்துல் கனி பராதர், உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, பாதுகாப்புத்துறை அமைச்சராக யாகூப் உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.முன்னதாக ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.