களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பின் ஆரம்ப நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஊடகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
21ம் நூற்றாண்டின் யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் பலசாலிகள் .ஊடகத்தின் முக்கியத்துவத்தை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.அந்தவகையில் களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .இதற்காக என்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (10) நிகழ்நிலையில் (zoom) இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.