உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் புதிய திருப்பங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணி- ரமீஸ் ராஜாவின் அதிரடி முடிவு!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலககிண்ண போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மத்தியூ ஹைடன் ,தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் பிலான்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ரமீஸ் ராஜா அறிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ரமீஸ் ராஜா லாகூர் மைதானத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து இந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட மிஸ்பாஹ் உல் ஹக் அதே போன்று பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் அண்மையில் உலக கிண்ண அணி அறிவிக்கப்பட்ட பின் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.இந் நிலையில் நியூசிலாந்துடனான உள்ளூர் தொடருக்கு பாகிஸ்தான் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக சக்லைன் முஷ்தாக், பந்துவீச்சாளராக அப்துல் ரசாக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே அடுத்து வர உள்ள மிக முக்கியமான உலக்கிண்ண தொடருக்கு மத்தியூ ஹெய்டன்,பிலான்டர் ஆகியோர் பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜா நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...