தென்னிந்திய கேரளா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். மேலும் அங்கு நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை விரைவுபடுத்தி வருகிறது.
12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அரிய வகை வைரஸால் இறந்ததை அடுத்து கேரளா மிகவும் விழிப்புடன் உள்ளது, கடலோரத்தில் உள்ள மருத்துவமனையில் இறந்த சிறுவனுடன் தொடர்பு கொண்ட நூற்றுக்கணக்கானவர்களை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.