மேலும் ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் 2 சந்தேக நபர்கள் கைது!

Date:

நீர்கொழும்பு மா ஓயா நீரேந்துப் பகுதியில் நேற்று முன்தினம் தினம் (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது, ​​நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரியளவிலான (1,162 கிலோ கிராமிற்கும் அதிகம்) உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்போது கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகள் சகிதம் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றது.

இந்த நடவடிக்கையின்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நீர்கொழும்பில் வசிப்பிடமாக கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட பொருட்கள் சகிதம் சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க, சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...