லத்தீப் பாரூக்
சட்டத்தையும் ஒழுங்கையும் முடிவின்றி மீறி வரும் இஸ்ரேல், பலஸ்தீன மற்றும் அரபு மக்களின் மயான பூமிகளையும் அங்குள்ள புதைகுழிகளையும் அதில் அடக்கப்பட்டிருப்பவர்களையும் கூட விட்டு வைக்காமல் தனது அராஜகத்தை தொடருகின்றது. சுமார் 4000 மீற்றர் சதுர பரப்பளவு கொண்ட அல் யூகபியா என்ற அடக்கஸ்தலத்தை 2021 அக்டோபர் 11ம் திகதி இஸ்ரேல் தரைமட்டமாக்கி உள்ளது.இது இஸ்ரேலினால் ஆத்திரமிக்கப்பட்டுள்ள அல் – அக்ஸா பள்ளில்லாசல் வளாகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மிகப் பழமையான மயான பூமியாகும்.
ஜெருஸலத்தில் உள்ள இஸ்லாமிய மயான பூமிகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் முஸ்தபா அபூஸஹரா 1948 முதல் 1967 வரையான காலப்பகுதியில் பலஸ்தீன போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயான பூமிகள் தற்போது இஸ்ரேலினால் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார், 1967ல் இஸ்ரேலின் ஆஃகிரமிப்பு யுத்தத்தில் பழைய ஜெரூசலம் நகரைக் காப்பாற்றுவதில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் போராடி உயிர் நீத்த ஜோர்தான் படைவீரர்கள் பலரும் இந்த யூசுபியா மயான பூமியில் தான் சுடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்த மயானத்தை தரைமட்டமாக்கி அதில் “விவிவிய பூந்தோட்டப் பாதை’ ஒன்றை நிர்மாணிப்பது தான் இஸ்ரேலின் திட்டம்.இது ஊர் பேர் தெரியாத படை வீரர்களின் நினைவுத் தூபி ஒன்றையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது. அத்தோடு பண்டைய மற்றும் நவீன முறையிலான கல்லறைகள் பலவும் இங்கு நிர்மாணிக்கப்படவுள்ளன.தமது அன்புக்குரிய பலர் இங்கு புதைக்கப்பட்டுள்ளதால் கிழக்கு ஜெருஸலம் நகரில் வாழும் மக்கள் தற்போது கொதிப்பும் கோபமும் அடத்துள்ளனர்.பழைய நகரத்தையும் அல் அக்ஸா பள்ளிவாசலையும் நோக்கிச் செல்லும் பண்டைய கால படிக்கட்டுக்களை கடந்த டிசம்பரில் தகர்ப்பதற்கு இஸ்ரேல் முயன்றது ஆனால் பலஸ்தீன மக்களின் தீவிர எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி தடைபட்டது.
2014 முதல் குறிப்பிட்ட மயான பூமியின் வட பகுதியில் யாரையும் அடக்கக்கூடாது என இஸ்ரேல் தடை விதித்தது. போராளிகளினதும், உயிர்த் தியாகிகளினதும் புதைகுழிகள் பலவும் அங்கு நாசமாக்கப்பட்டன.
ஜெரூஸலத்தில் உள்ள யூசுபியா மயான பூமி.

இந்த நிலை இன்னமும் தொடருகின்றது.2020 ஜூன் 8 ஆம் திகதி ஹெப்ரோன் நகருக்கு தெற்காக உள்ள யெட்டர் நகரப் பகுதியில் அமைந்துள்ள மயான பூமி ஒன்றை இஸ்ரேல் துவம்சம் செய்தது. அதனைத் தொடர்ந்து ஐபா என்ற இடத்தில் உள்ள 18ம் நூற்றாண்டு முதல் இருந்து வரும் ஒரு மயான பூமியும் அழிக்கப்பட்டது .வீடுகளையும் வர்த்தக கட்டிடங்களையும் நிர்மாணிக்வே இந்த மயான பூமி அழிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த இடங்களில் நிர்மாணத்துக்குப் பொருத்தமான பல இடங்கள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் அவற்றை இனம் கண்டிருந்தால் பெரும் சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம் என பிரதேசத்தில் வாழும் மக்கள் கூறுகின்றனர். இந்த விடயம் மிகவும் உணர்வுபூர்வமானது இந்தப் பகுதியில் உள்ள டேஸோ மற்றும் ஜாம்சீன் போன்ற மயான பூமிகளும் தற்போது ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.
தரைமட்டமாக்கப்பட்ட மயான பூமியின் புதைகுழிகளில் இருந்து எச்சங்களை சேகரிக்கும் பலஸ்தீனர்கள்.

பல மணிநேர ஆர்ப்பாட்டத்தின் பின்: ஜபா நகர மணிக்கூட்டு கோபுர பகுதியை நோக்கி மக்கள் நகர்ந்தனர்.இந்தப் பிரதேசத்தை சியோனிச கும்பல்களும், பொலிஸாரும் ஆக்கிரமிப்பதற்கு முன்பிருந்தே இந்த மணிக்கூட்டு கோபுரம் இங்குள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற றாமி கொடாய்லத் என்ற நபர் கூறினார்.அதேபோல் இவர்கள் வருவதற்கு முன்பிருந்தே எமது மயான பூமியும் இங்கு இருந்துள்ளது. நாங்கள் தான் இங்கு பரம்பரையாக வாழ்பவர்கள் இங்கிருந்து நாம் போக மாட்டோம். தொடர்ந்தும் இங்கு நாம் இருப்போம். இவர்கள் இறந்தவர்களுக்கும் அநீதி இழைக்கின்றார்கள்.இதுவே யூதர்களின் மயான பூமியாக இருந்தால் இவர்களின்; திட்டமே மாறி இருக்கும் என்று அந்த நபர் மேலும் விளக்கினார்.
இவை யூதர்களின் கல்லறைகளாக இருந்திருந்தால் இந்த அநியாயம் நடந்திருக்காது. காரணம் அவர்களின் எலும்புகள் வேறு விதமானவை என்பது தான் அவர்களின் எண்ணம். அரபு நாடுகளில் பல யூத மயான பூமிகளும், சமாதிகளும் உள்ளன. அவை அங்கு பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. காரணம் அங்கு யூத மயான பூமி என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை மயான பூமிகள் எல்லாமே ஒன்று தான் என அரபு நாடுகள் கருதுகின்றன. இறந்தவர்களுக்கு கௌரவம் அளிக்கவேண்டும் என்பதில் தேசங்களை கருத்தில் கொள்ளத் தேவையில்லை அதற்கு மாறாக டெல் அவிவ் நகர நிர்வாகம் ஐபாவில் முஸ்லிம்களது அல்லது அரபிகளது எந்தவொரு நினைவுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வத்துள்ளது. அவற்றை அழித்துவிட வேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பொலிஸார் பூரண உதவியை வழங்குகின்றனர். ஊடகங்கள் இங்கு இடம்பெறும் அநியாயங்களை மூடி மறைக்கின்றன என்று இன்னொரு. பவஸ்தீன் இளைஞர் தெரிவித்தார்.
புதைகுழிகள் சின்னாபின்னமாக்கப்பட்ட யூசுபியா மயான பூமி

2018 ஏப்ரலில் இந்தப் பணிகளை யூத நிர்வாகம் தொடங்கிய போது அங்கு 60க்கும் மேற்பட்ட புதைகுழிகளுடன் கூடிய அல் இஸாப் என்ற மயான பூமியும் காணப்பட்டது. கட்டிட நிர்மாணங்களை நிறுத்தக் கோரி ஜபா நகர மக்கள் சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .நீதி மன்றம் அந்த மனுவின் மீது இடைக்கால தடை விதித்தது.ஆனால் கடந்த ஜனவரியில் மாவட்ட நீதிபதி அளிகெய்ல் கொஹென் அளித்த தீர்ப்பில் ஜபா நகர முஸ்லிம்களின் உணர்வுகள் பேணப்பட வேண்டியது முக்கியம் தான் இருந்தாலும் இறந்தவர்களை விட தற்போது உயிரோடு வாழ்பவர்களின் நலன்களில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டியது அதைவிட முக்கியம் எனத் தீர்ப்பளித்து மனுவை நிராகரித்தார்.
இதே நேரம் ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீனத்தின் அவதானிப்பு நிலை நிரந்தர பிரதிநிதயாக இருக்கின்றவர் ஐ-நா செயலாளர் நாயகம், பொதுச் சபைத் தலைவர் மற்றும் பாதுகாப்புச் சபை தலைவர் ஆகியோரிடம் மனு ஒன்றை கையளித்தார். முஸ்லிம்களின் புதை குழிகளை சிதைத்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கையை நிறுத்துமாறு அவர் அதில் கேட்டிருந்தார்.
ஜெருஸலத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாமிலா மயான பூமி தொடர்ந்தும் இஸ்ரேலியர்களால் சேதப்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக மீண்டும் உங்கள் கவனத்தை ஈர்க்க நான் கடமைபட்டுள்ளேன், மனித எச்சங்களையும். நூற்றுக்கணக்கான புதை குழிகளையும் சேதப்படுத்தி கலைத்து விட்டு அந்த இடத்தில் கட்டிடங்களை நிர்மாணிப்பது அறுவெறுப்பானதும் ஆபத்தானதுமாகும். இது தார்மிக விழுமியங்கள் கொண்ட ஒவ்வொரு தனிமனிதனதும் அடிப்படை உணர்வுகள் மற்றும் மனச்சாட்சி என்பனவற்றைக் காயப்படுத்தும் செயலாகும்.
மாமிலா மயானம் முஸ்லிம்களின் பழம்பெரும் மயான பூமிகளில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட 12ம் நூற்றாண்டு காலத்துக்கு சொந்தமானதாகும். ஆயிரக்கணக்கான பலஸ்தீன் மக்கள், சமயத் தலைவர்கள், அதிகாரிகள், கல்விமான்கள், உயிர்த்தியாகிகள் என பல்வேறு தரப்பினர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல தசாப்தங்களாக இந்த மயான பூமி ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த இடமாக மதிக்கப்பட்டு வந்துள்ளது. ஜெருஸலம் நகரில் இஸ்லாமிய சமய பாரம்பரிய விவகாரங்களுக்கான ஒரு மையப் புள்ளியாகவும் இந்த இடம் இருந்து வந்துள்ளது. 1977ம் ஆண்டு முஸ்லிம் உயர் சபையான் வரலாற்று ரீதியான ஒரு இடமாக இந்த இடம் பிரகடனம் செய்யப்பட்டது. 1944ல் பிரிட்டிஷ் ஆணை பெற்ற அதிகாரிகளால் தொல்பொருள்கள் இடமாகவும் இது பிரகடனம் செய்யப்பட்டது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக ஜெருஸலத்தின் இஸ்லாமிய தர்ம ஸ்தாபனம் இந்த மயான பூயியை பராமரித்து வந்துள்ளது. 1967ஆக்கிரமிப்பு முதல் இஸ்ரேல் இதற்கு தடையாக இருந்து வருகின்றது. இதனால் பல முரண்பாடுகள் தோன்றி உள்ளன. இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இங்கு தேவையான சீராக்கல் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள’ முன்வந்தனர். அதற்கும் இஸ்ரேலிய தரப்பால் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் மேற்கொண்ட திருத்தப் பணிகள் கூட இஸ்ரேலிய அதிகாரிகளால் சிதைக்கப்பட்டன். இந்த மயான பூமி தொடர்ந்தும் அவல நிலையில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.பலஸ்தீனர்களின் கலாசார விழுமியங்களுக்கு மட்டுமன்றி இஸ்லாமிய சமய நடவடிக்கைகளுக்கும் இதன் மூலம் பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் மேலும் பல சேதங்களை இஸ்ரேலிய அதிகாரிகள் இங்கு விளைவித்த வண்ணமே இருக்கின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 1300 புதைகுழிகளை இஸ்ரேல் இந்தப் பிரதேசங்களில் நாசமாக்கி உள்ளது. அண்மையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட மீள் புனரமைப்பு செய்யப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுத் தூபிகளை இஸ்ரேல் நாசமாக்கி உள்ளது. இவற்றுள் மிகவும் பழமையான வரலற்று ரீதியான நினைவுத் தூபிகள் பலவும் அடங்கும்.
இஸ்ரேல் எந்தத் தயக்கமுமின்றி தொடர்ந்தும் இதைச் செய்யும் காரணம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உற்பட நவீன ஏகாதிபத்திய காலணித்துவ நாசகார சக்திகளினதும் அரபுலக சர்வாதிகாரிகளினதும் முழு ஆதரவு தனக்கு உண்டு என்பதை இஸ்ரேல் நன்கு அறியும். அது மட்டுமல்ல இன்றைய அரபுலகிலக சர்வாதிகாரிகள் எவரும் பலஸ்தீன மக்களை ஆதரிக்கவும் மாட்டார்கள் அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கவும் மாட்டார்கள் என்பதையும் இஸ்ரேல் நன்கு அறியும். காரணம் இந்த அரபுலக சர்வதிகாரிகள் இஸ்லாத்தையும் ,முஸ்லிம்களையும் தமது சுய கௌரவத்தையும் விட்டு விலகி சென்று நீண்ட நாற்கள் ஆகின்றன. தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் அமெரிக்க மற்றும் ஏகாதபத்திய சக்திகளிடம் இவற்றை எல்லாம் அடகு வைத்துள்ளனர்.இதுதான் இன்றைய முஸ்லிம் உலகினதும் பலஸ்தீன மக்களினதும் தலைவிதி.
