தனியார் பஸ் கட்டணங்களை அறவிடுவதற்காக பஸ் கட்டண அட்டை முறையொன்றை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமுல்படுத்த கூடியதாகவுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த அட்டை முறைக்கான மத்திய வங்கியின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கிக்கு இதனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் நடத்துநர்களை சேவைக்கு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையின் காரணமாக இப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இந்த முறையை அமுல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.