நாளை முதல் (25) மாகாணங்களுக்குள் மாத்திரம் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கமைய 133 புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் புகையிரதங்களில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.