போலாந்தை தாக்கிய சூறாவளியால் 900க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
போலந்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வார்சாவில் கார் மீது மரம் சாய்ந்ததில் காரில் அமர்ந்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சூறாவளியால் 4 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.