ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்து பயணம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) ஸ்கொட்லாந்து பயணமானார்.ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள ” Cop: 26 ” ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணமாகியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கு எவ்வாறு முகம்கொடுத்து செயற்படுவது தொடர்பாக நாடுகள் திட்டமிடும்  ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகள் உலகத் தலைவர்களின்  மாநாட்டுக்கான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தினை தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் என்று நடைபெறுகின்ற இம் மாநாட்டில் 197 நாடுகளின் அரசத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...