டி20 உலகக்கிண்ண போட்டிகள் சமநிலையில் முடிந்தால் என்ன நடக்கும்? டி20 உலகக்கிண்ணம் பற்றிய சிறு முன்னோட்டம்! 

Date:

ஆஷிக் இர்பான்

7 ஆவது டி20 உலகக்கிண்ணத் திருவிழா நாளை ஒக்டோபர் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இவ் வருட இருபதுக்கு இருபது  உலக்கிண்ண போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலைமை ஏற்று ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் நாட்டு கிரிக்கெட் மைதானங்களை குத்தகைக்கு எடுத்து நடத்தவுள்ளது.

ஆரம்பத்தில் குறித்த உலகக்கிண்ண போட்டிகளை 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த வருடம் ஜுலை மாதம்  கொவிட் 19 நிலைமை காரணமாக உலக்கிண்ண போட்டிகளை ஒத்திவைப்பதாக உலக கிரிக்கெட் வாரியம் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தது. பின்னர் ஏலவே திட்டமிடப்பட்ட திகதியிலேயே போட்டிகளை நடாத்தப் போவதாகவும், இந்த வருட இருபதுக்கு இருபது உலக்கிண்ண போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடாத்தும் என்றும் அதனைத் தொடர்ந்து வரும் இருபதுக்கு இருபது உலக்கிண்ண போட்டிகளை அவுஸ்திரேலியா நடாத்தவுள்ளது என்றும் உலக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இருப்பினும் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமானதால் உலகக்கிண்ண போட்டிகளை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் குறித்த உலக்கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் நாட்டு மைதானங்களில் இந்தியா நடாத்தும் என்று இவ் வருடம்(2021) ஜூன் மாதத்தில் ஐ. சி. சி அறிவித்தமைக்கு அமைவாக இந்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரைப் பொருத்தவரையில் மொத்தமாக 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து போட்டியிடவுள்ளன. அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியன்று ஐ. சி. சி இருபதுக்கு இருபது தரப்படுத்துதலுக்கு அமைவாக முதல் 7 அணிகளும் போட்டிகளை நடாத்தும் அணியுமாக மொத்தம் 10 அணிகள் நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றனர். மீதமுள்ள 4 இடங்களுக்கு ஏனைய அணிகளில் இருந்து தகுதிகான் போட்டிகளில் இரண்டு குழுக்களிலும் இருந்து இரு அணிகள் வீதம் தெரிவாகவுள்ளனர்.

அந்த வகையில் நாளைய தினம் தகுதிகான் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. முதலாவது போட்டியாக ஓமான் மற்றும் பபுவா நியூகீனியா அணிகள் அல் மிராட் மைதானத்தில் இலங்கை நேரத்தின் படி பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளைய தினம் இரண்டாவது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இலங்கை நேரத்தின் படி இரவு 7.30 மணிக்கு அல்மிராட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணி தகுதிகான் போட்டிகளில் விளையாடியே சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்கான முதலாவது தகுதிகான் போட்டி நாளை மறுநாள் (18) நமீபியாவுடன் அபுதாபியில் இடம்பெறவுள்ளது.

பரிசுத் தொகை

ஆரம்பமாக தகுதிகான் போட்டிகளில் வெளியேறும் அணிகளுக்கு நாற்பதாயிரம் அமெரிக்க டாலரும் சுப்பர் 12 சுற்றில் வெளியேரும் அணிகளுக்கு எழுபதாயிரம் அமெரிக்க டாலர்களும், சுப்பர் 12 மற்றும் தகுதிகான் போட்டிகளில் வெற்றிபெறும் ஒவ்வொரு போட்டிகளுக்கும் நாற்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளதுடன் அரையிறுதிப் போட்டிகளில் பங்குபற்றும் அணிகளுக்கு 4 இலட்சம் அமெரிக்க டாலர்களும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டாலர்களும், கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

* முதல் முறையாக டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ரிவீவ்(மேல் முறையீடு) முறைமை இந்த தடவை அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 ரிவீவ் வீதம் வழங்கப்படும்.

* போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்தால் சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர். வெற்றியாளர் தீர்மானமாகும் வரை சூப்பர் ஓவர் நடைபெறும்.

* நேரம் போதாமை அல்லது காலநிலை சீர்கேடு காரணமாக போட்டிகள் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்படும்.

* அரையிறுதிப் போட்டிகளின் போது மேற்குறிப்பிட்ட காரணங்களால் போட்டிகளை கைவிட நேர்ந்தால் சுப்பர் 12 சுற்றில் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுளையும்.

* மேற்குறிப்பிட்ட காரணங்களால் இறுதிப் போட்டியை கைவிட நேர்ந்தால் இரு அணிகளுக்கும் கிண்ணமும் பரிசுத்தொகையும் பகிர்ந்தளிக்கப்படும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...