கிரிக்கெட் உலகமே கண்ணீர் வடித்த நாள்; பிலிப் ஹியூஸ் மறைந்து 7 வருட நினைவு தினம்!

Date:

கடந்த 2014 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்த பிலிப் ஹியூசின் 7

வது ஆண்டு நினைவு தினம் (27) இன்றாகும்.இந்த நாளில் கிரிக்கெட் உலகமே கண்ணீரால் நனைந்தது.

என்ன நடந்தது?

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தெற்கு அவுஸ்திரேலியா அணியும் ,நியூ சவுத் வேல்ஸ் அணியும் மோதின.தெற்கு அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.போட்டியின் 49 வது ஓவரை நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் வீசினார்.63 ஓட்டங்களுடன் ஆடுகளத்திலிருந்த ஹியூஸ் பவுன்சராக வந்த பந்து மேலெழும்ப அதை புல்ஷொட்டாக அடிக்க முயற்சித்த போது பந்தானது துடுப்பில் படாது ஹியூஸின் தலையின் பின்புறத்தில் பலமாக தாக்கி அப்படியே நிலைகுலைந்து ஹியூஸ் கீழே சரிந்து வீழ்ந்தார்.பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின் நவம்பர் 27 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரின் மறைவுக்கு அவுஸ்திரேலியா மாத்திரமல்ல முழு கிரிக்கெட் உலகமுமே கண்ணீர் வடித்தது.இதனை கிரிக்கெட் இரசிகர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள்.

யார் இந்த ஹியூஸ்?

1988 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்த ஹியூஸ் சிறுவயதில் ரக்பி வீரராக இருந்து பின்னர் சிறந்த கிரிக்கெட் வீரராக முன்னேற்றம் அடைந்தார்.அவுஸ்திரேலியா அணிக்காக 26 டெஸ்ட், 25 ஒரு நாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடியுள்ளார்.கிரிக்கெட் வீரர்கள் ஹெல்மெட் அணியும் போதும் பவுன்சர்களை எதிர்கொள்ளும் போதும் அவர்களின் நினைவில் பிலிப் ஹியூஸ் வந்து செல்வார் என்பது மறுக்க முடியாத உண்மை.

“பந்து தாக்கியதும் எனக்கு பிலிப் ஹியூஸ் தான் நினைவுக்கு வந்தது என்றார் அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித்.கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டன் லோர்ட்ஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் போட்டியில் பந்து தாக்கி காயமடைந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிலிப் ஹியூசின் மறைவு கிரிக்கெட் உலகின் கருப்பு தினமாகும்.

அப்ரா அன்ஸார்

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...