மூன்றாவது நாளாகவும் தொடரும் மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம்!

Date:

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 % பங்குகள் அமெரிக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துள்ள ‘ சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் (27) தொடர்ந்து வருகிறது.

தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் செளமய குமாரவடு தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படும் மின்சார துண்டிப்புக்களை வழமைக்கு கொண்டு வர முடியாத நிலை உருவாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்னிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான 5 வர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.குறித்த மனு நேற்றைய தினம் (26) மூவரடங்கிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய , நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே , பிரியன்த ஜயவர்தன , விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி தெஹிதெனிய ஆகியோர் கொண்ட குழு முன்னிலையில் ஆரயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...

பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய வானிலை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...