பல்கலைக்கழக மாணவர் பதிவு டிசம்பர் மாதம் முதல்!

Date:

2020 ஆம் ஆண்டின் கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள தாகவும் , இதற்கமைய ஒவ்வொரு மாணவரும் தான் தெரிவாகியுள்ள பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகள் தொடர்பில் அறிந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.இதேவேளை பல்வேறு பீடங்களையும் டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.இம் முறை பல்கலைக்கழகத்திற்கு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...