முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுத்தலுக்கு அமைய குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக் குழுவில் மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக கொடஹேவா, நிமல் லன்சா , சுதர்ஷனி, பெர்ணான்டோபுள்ளே, நளின் பெர்ணான்டோ , ஜயந்த வீரசீங்க மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயவத்தும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.