இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையில் நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில்,ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும்,இந்த காலப் பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளிகள் 706 ஆக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் காலி மாவட்டத்தில் 643 நோயாளர்கள், களுத்துறை மாவட்டத்தில் 600 நோயாளர்கள் , கேகாலை மாவட்டத்தில் 418 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 4 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் 8,579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ் வருடம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)