ஐ.சி.சி.யின் ஹோல் ஒப் பேம்க்கு மஹேல ஜயவர்தன தெரிவு!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென் ஆபிரிக்காவின் ஷோன் பொலேக் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஹோல் ஒப் பேம்க்கு தெரிவாகியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக 2009ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஹோல் ஒப் பேம் விருதுகளை வழங்கி வருகிறது.அந்த வகையில், இந்த வருடம் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென் ஆபிரிக்காவின் ஷோன் பொலோக் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜயவர்தன 11,814 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதில் 34 சதங்களும், 50 அரைச் சதங்களும் அடங்குகின்றன.அதேபோல், 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12,650 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 19 சதங்களும், 77 அரைச் சதங்களும் அடங்குகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஆகியோருக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...