வட மாகாணத்தின் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Date:

இன்று (10) வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவத்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

குறிப்பிட்ட மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவிக்கின்றார்.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு நேற்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், இன்று வட மாகாணத்தின் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...