அரையிறுதி ஆட்டத்தில் ஷஹீனின் பந்துவீச்சில் எனக்கு திருப்தியில்லை- சஹீத் அப்ரிடி அதிருப்தி!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கடந்த வியாழக்கிழமை (11) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்றது.இப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

177 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சொதப்பியது.எனினும் மெதிவ் வேர்ட்டினால் பெறப்பட்ட ஹெட்ரிக் சிக்ஸரினால் போட்டி ஆஸி பக்கம் திரும்பியது.இந்த 3 ஆறு ஓட்டங்களை பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாமின் நம்பிக்கை பந்துவீச்சாளரான ஷஹீன் அப்ரிடியின் பந்துக்கே ஹேட் பெற்றுக் கொண்டார்.அத்தோடு இறுதி ஓவரின் மூன்றாவது பந்தை ஹேட் அடித்த போது பிடியெடுப்புக்கான வாய்ப்பு இருந்த போதும் அதனை ஹசன் அலி நழுவ விட்டிருந்தார்.இந் நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

இந் நிலையில் பாகிஸ்தானின் தோல்விக்கு ஹசன் அலி தான் காரணமென பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் அணித் தலைவர் மற்றும் சகல துறை வீரருமான ஷஹீத் அப்ரிடி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது,

“ஹசன் அலி பிடியெடுப்பை விட்டார் என்பதற்காக தொடர்ந்து மூன்று ஆறு ஓட்டங்களை அடிக்கும் படியாக பந்து வீசுவீர்களா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஷஹீன் அப்ரிடி பந்து வீசிய விதத்தில் எனக்கு திருப்தியில்லை.அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர்.அந்த வேகத்தை அவர் சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.அதாவது அவுட் சைட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயும் அவர் வேகமான யோக்கர் பந்துகளை வீசியிருக்க வேண்டும்.இத் தொடரில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.வசீம் அக்ரம், ஆமிர் இவ்வாறானவர்கள் போன்று பந்து வீசினார்.இந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் அவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.

ஷஹீன் ஷா அப்ரிடி, ஷஹீத் அப்ரிடியின் மூத்த மகளை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.இந்த முறை T20 கிண்ணத்தை வெல்லும் அணியாக பாகிஸ்தான் அனைத்து கிரிக்கெட் இரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரையிறுதியுடன் வெளியேறியது பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் அணி வீரர்களை பெரிதும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அப்ரா அன்ஸார்

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...