கிண்ணியா உப பஸ் டிப்போ, டிப்போவாக தரமுயர்த்தப்படும் -போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Date:

கிண்ணியா உப பஸ் டிப்போ, டிப்போவாக தரமுயர்த்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிண்ணியா பஸ் டிப்போ தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,

இது எனது தந்தையினால் 1994.07.27 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .ஆரம்பிக்கப்பட்டு 27 வருடங்கள் கடந்தும் இன்னும் உப டிப்போவாகவே காணப்படுகின்றது .கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முதலாவது உபசாலை இதுவாகும்.கிண்ணியாவிற்கு பின்னர்உபசாலைகளாக ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி, களுவாஞ்சிகுடி உபசாலைகள் தற்பொழுது டிப்போவாக தரமுயர்த்தப்பட்டுள்ளன எனவே இதை டிப்போவாக தரமுயர்த்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,

அரசின் செலவீனங்களை குறைக்கும் முகமாக அருகருகே உள்ள உப பஸ் டிப்போக்களை மூடுகின்ற கொள்கையில் அரசு இருந்தாலும் கிண்ணியா உப பஸ் டிப்போ பிரதான பஸ் டிப்போவில் இருந்து 20 km க்கு அப்பால் உள்ளதால் இது டிப்போவாக தரமுயர்த்தப்படும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...