மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!

Date:

நாட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.அதன்பிடி 750 மி.லீற்றர் உள்நாட்டு அதி விசேட சாராய போத்தல் ஒன்று 96.14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் 5% தை விட குறைவான செறிவை கொண்ட பியர் 625 மி.மீற்றர் போத்தல் ஒன்றின் விலை 3.10 ரூபாவாலும் மற்றும் 5% தை விட அதிகமான செறிவை கொண்ட “பீர்” போத்தல் ஒன்றின் விலை 14 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...