இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் கௌரவ பிரதமருடன் விசேட சந்திப்பு!

Date:

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (30) இரவு கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

கௌரவ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் இவ் விசேட சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றது.

இதன்போது வருகைத் தந்திருந்த தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுடன் கௌரவ பிரதமர் நட்பு ரீதியாக கலத்துரையாடினார்.. கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட துரிசு செயற்பாட்டிற்கு வருகைத்தந்திருந்த நுதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து பேணவதல் மற்றும் பரஸ்பர் செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்வது தொடர்பில் இதன்போது தூதுவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தொற்று நிலைமைக்கு சவால்களை வெற்றி கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை. கட்டியெழுப்புவதற்கு தற்போதைய மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ரீ.எல்.பீரிஸ் அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார்.அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஓமான், பலஸ்தீன். குவைத் சவுதி அரேபியா, மலேசியா, கடார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம். இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைதீவு, பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந் நாடுகளின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்கள்  இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடக பிரிவு

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...