கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை ஒளி அலங்காரங்களுடன் நிறுத்தி கொள்ளாமல், அதை தாண்டி வறியவர்களுக்கு உதவுமாறு போப்பாண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வத்திகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவதிலோ அல்லது வெற்றியைத் தேடி அலைவதிலோ வாழ் நாளை செலவிடாமல், இல்லாதவர்களுக்கு சேவை செய்வதில் செலவிடுமாறு கேட்டுக்கொண்டார்.மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் பின்பற்றப்படாததால் பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அனைவரும் உறுதி ஏற்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.