சஹீரா சமீரினால் எழுதப்பட்ட “ஓயாத ஓலங்கள்” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு!

Date:

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவி சஹீரா சமீரினால் எழுதப்பட்ட “ஓயாத ஓலங்கள்” கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 2021 டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மன்டபத்தில் நடைபெற்றது.கல்லூரி அதிபர் ஸைனுல் ஹுசைன் வரவேட்புரையுடன் நிகழ்வை துவக்கி வைத்தார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த ஊடகவியலாளரும், மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தொலைக்காட்சி செய்திவாசிப்பாளருமான ராஷித் மல்ஹார்டீன் புத்தகத்தை வெளியிட்டு வைத்ததுடன் முதற் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் நூல் அறிமுக விழாவை சிரேஷ்ட  ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் நடத்தினார். நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊர்மக்கள், தனவந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்தனர்.

சஹீரா சமீர் ஆரம்பக் கல்வியை தல்கஸ்பீடியா முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை ஹெம்மாதகமை மடுள்போவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றதோடு மாவனல்லை ஜே.எம் மீடியா ஊடகக் கல்லூரியில் ஊடகக் கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

பவளவிழாக் காண இருக்கும் மடுல்போவை மு.ம.வி இன் பவளவிழாவை நோக்கிய செயற்திட்டங்களில் ஒன்றாகவே இப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...