அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளி ; இதுவரையில் 84 பேர் உயிரிழப்பு!

Date:

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளிப் புயலில் இதுவரையில் 84 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி , மீட்பு பணிகளை துரிதப்படுத்தி ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ், மிஸ்சோரி, டென்னிஸ்ஸி, அர்கான்சாஸ், மிஸிசிப்பி உள்ளிட்ட 7 மாகாணங்களை வரலாறு காணாத சூறாவளிக் காற்று புரட்டிப் போட்டது. கென்டக்கி மாகாணத்தில் மட்டும் ஒரே இரவில் 18 முறை சூறாவளிக் காற்று தாக்கியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மணிக்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கிட்டங்கிகள் மரங்கள் என அனைத்தும் சூறாவளிக்காற்றில் நாலாபுறம் சிதறி உருக்குலைந்தன.

புயல் காற்றில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேற்கூரை விழுந்த சம்பவத்தில் பணியில் இருந்த 110 பேரில், 50 பேர் வரை உயிரிழந்ததாகவும் 58 பேரை காயங்களுடன் மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அமேசான் நிறுவன கிட்டங்கியின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதா தெரிவிக்கப்பட்டு உள்ளது. கென்டக்கி மாகாணத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ள அதிபர் ஜோ பைடன், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

டென்னிசி மாகாணத்தின் Nashville நகர குடியிருப்புப் பகுதியில் ராட்சத ஒலிபெருக்கி மூலம் அபாய ஒலி எழுப்பபட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு  வருவதாகவும் , ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...