இந்தோனேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் எந்த நாட்டுக்கும் போகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரோன் சோதனை செய்யப்பட்டிருப்பதாக அந் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பூடி குனாடி சாதிகீன் தெரிவித்துள்ளார்.
வடக்கு சுலாவேசியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த 5 பேரில் இருவர் வெளிநாடு சென்று திரும்பிய இந்தோனேசியர்கள் எனவும் மீதமுள்ள மூவரும் சீனர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.