புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் இன்று (27) புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட உள்ளது.இக் கலந்துரையாடல் முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது .
இக் கலந்துரையாடலின் பின்னரும் தாம் முன்வைத்துள்ள கோரிக்கையை தீர்வு கிடைக்காவிடத்து தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் .
எனினும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் பொதிகள் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் செயற்பாட்டை நிறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.