நாட்டினுள் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று (23) அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.உணவு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என சிலர் முன்வைக்கும் கூற்றை ஏற்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.