ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு எதிரொலி -கட்டுப்பாடுகள் விதிக்க உலக நாடுகள் ஆலோசனை!

Date:

ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பல்வேறு கட்டுபாடுகளை அமுல்படுத்த ஆலோசித்து வருகின்றன.இஸ்ரேலில் பூஸ்டர் டோசை கட்டாயமாக்கிய ஜனாதிபதி நப்தாலி பென்னட் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரவும், ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான பயணங்களுக்கு தடை விதித்து, சிவப்பு பட்டியலில் சேர்த்து அறிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் ஜனவரி 14-ஆம் தேதி வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் பரவல் அதிகம் காணப்படும் பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஜாவித் தெரிவித்துள்ளார்.

சீனாவில் புதிதாக இரண்டு பேருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சீனாவின் அரச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...