கண்டி எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு 2022ம் ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள கலண்டர் வெளியீட்டு வைபவமும், கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் நேற்று (15) புதன்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் 1998ம் வருட மாணவர்களின் அனுசரணையுடன் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக தெல்தோட்டை பிரதேச செயலாளர் சட்டத்தரணி திருமதி ஆத்மா திலுக்ஷி ஜயரத்ன கலந்து கொண்டார்.
2022ம் ஆண்டுக்காக அச்சிடப்பட்ட கலண்டர்களின் முதற் பிரதிகளை பிரதம அதிதியின் கரங்களால் பிரதேசத்தின் ஏனைய பாடசாலை அதிபர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும், கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தை பிரதம அதிதியாக கலந்து கொண்ட தெல்தோட்டை பிரதேச செயலாளர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.