2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் விதிகளின் கீழ், அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பின்வரும் அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில்,
1.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன – உறுப்பினர் மற்றும் தலைவர்.
2.லியன ஆராச்சிலாகே ஜகத் பண்டார லியன ஆராச்சி – உறுப்பினர்.
3. திருமதி கிஷாலி பின்டோ ஜயவர்தன – உறுப்பினர்
4. ஓய்வுபெற்ற நீதிபதி பி. திருமதி ரோஹினி வல்கம – உறுப்பினர்
5. கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் – உறுப்பினர்.
ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.