துருக்கிய புலமைப்பரிசில் திட்டம் மற்றும் துருக்கிய சுற்றுலா , போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்த “சர்வதேச மாணவர் விருதுகள் 2021” போட்டியில் இலங்கையர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
போட்டியில் ‘ஊடகம்-தொடர்பு / ஆவணப்படம்’ பிரிவில் இது 2வது இடம் கிடைத்துள்ளது.இரண்டாம் இடத்தை மாணவர் அப்துர் ரஹ்மான் முஜீப் பெற்றுக் கொண்டார்.அவர் இந்த விருதை துருக்கிய உதவித்தொகை திட்டத்தின் தலைவர் அப்துல்லா எரானிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
புத்தளம் நகரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் அப்துர் ரஹ்மான், இஸ்தான்புல் நகரில் உள்ள இப்னு கல்தூன் பல்கலைக் கழக ஊடகம் மற்றும் தொடர்பு சாதனங்களுக்கான கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.