பாகிஸ்தானின் பண்பாடு இலங்கையில் இல்லை -அவையில் சி.சிறிதரன் !

Date:

கடந்த டிசம்பர் (03) வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் சியல்கோட்டில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை நபரான பிரியந்த குமாரவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

” அண்மையில் பாகிஸ்தானில் மிக கொடூரமாக செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் இந் நேரத்தில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.இவ்வாறான சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன.விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த ரமேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார்.இது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன.இசைப் பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்களும் அந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டதையும் அது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன என சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பிரியந்தவின் மரணத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கோரியிருந்தார். இலங்கையில் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டும் மன்னிப்பு கோரும் அந்த பண்பாடு இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...