போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நான்கு அகதிகள் தீயணைப்பு வீரர்களின் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான், சிரியா நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் தஞ்சமடைய வருகின்ற அகதிகள் பெலாரஸ் வழியாக போலாந்துக்குள் ஊடுருவி வருகின்றனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலாந்துக்குள் சென்ற மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டனர்.உயிருக்கு போராடிய அவர்கள் தங்கள் நிலை குறித்து தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளது.அவர்கள் சிக்கியிருக்கும் பகுதியை ட்ரேன்கள் மூலம் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.