மதுரங்குளியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.
முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூக்குத்தொடுவா, கந்தத்தொடுவா, பாலசோலை, கடையாமோட்டை, கணமூலை வடக்கு, கணமூலை தெற்கு, புபுதுகம, மதுரங்குளி, வேலுசுமனபுர, வீரபுர, புழுதிவயல், விருதோடை, நல்லந்தளுவ ஆகிய 13 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையிலே இந் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.